Latest Updates

இலங்கை அமைச்சர் - பில்கேட்ஸ் சந்திப்பு..!



மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் (Bill Gates) சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த விசேட சந்திப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுவதும் அது தொடர்பில் ஆராய்வதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

உலக நாடுகளில் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பில்கேட்ஸினால் பெருமளவில் நிதியுதவி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source : News.lk