Latest Updates

மாணவர்களை பாராட்டும் வைபவம்..!




2017 புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு தெரிவான மாணவர்களை பாராட்டும் வைபவம் ஒன்று நிதி மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் நடைபெற்றது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு  நேற்று இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் கல்வியில் மாணவர்கள் காட்டும் ஆர்வத்தை போன்றே அவர்களின் கல்விக்கு அரசாங்கம் பாரியளவில் உதவிவருகின்றது. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் மாணவர்கள் பாராட்டப்பட்டதாகவும் இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மஹர கல்வி வலயத்திற்கு பௌதீக மற்றும் மனிதவளங்கள் உரிய முறையில் பெற்றுக்கொடுக்கப்பட்டதினால் தமது மாவட்டத்தில் இவ்வாறான உயர் பெறுபேறை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் பிரதிஅமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Source : News.lk