Latest Updates

சுற்றாடலுக்கு மக்கள் முக்கியத்துவம் வழங்குவதில்லை : ஊறுவரிகே வன்னியலத்தோ

Related image

சுற்றாடலுக்கு மக்கள் தற்போது முக்கியத்துவம் வழங்காததால் பிரச்சினைகள் பல ஏற்பட்டுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார்.

காலி உடுகம பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஆதி வாசிகளின் கலாச்சார நிகழ்ச்சியில் ஆதிவாசிகளின் தலைவர் உரையாற்றினார்.

உடனடியாக அறுவடையை பெறும் நோக்கில் விவசாயிகள் இரசாயன உரத்தை பயன்படுத்துவதாகவும் ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு அரச நிறுவனங்கள் பல செயற்பட்ட போதிலும் அவற்றினால் நிறைவேற்றப்படும் சேவை போதுமானதல்ல செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதனால் நோய்கள் பலவற்றை பொதுமக்கள் எதிர்கொண்டிருப்பதாகவும் என்றும் ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ மேலும் தெரிவித்தார்.

Source : News.lk