Latest Updates

இலங்கையில் சர்வதேச தரத்திலான சிறைச்சாலை திறப்பு..!

prison 10

சர்வதேச தரத்திலான சிறைச்சாலை கட்டத்தொகுதியொன்று அங்குணகொலபெலஸ்ஸ என்ற இடத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றபோது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , புனர்வாழ்;வளிப்பு , மீள்குடியேற்ற மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் இந்த சிறைச்சாலையை திறந்துவைத்தார்.

தென்மாகாணத்தில் அங்குணகொலபெலஸ்ஸ என்ற பிரதேசத்தில் எறமினியாய என்ற இடத்திலேயே இந்த சிறைச்சாலை 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

z p01 Country 02 780x439

தங்காலையிலுள்ள சிறைச்சாலைக்கு பதிலாக அமைக்கப்பட்ட இந்த சிறைச்சாலையில் ஆண் பெண் உள்ளிட்ட 1500 கைதிகள் இருப்பதற்கான வசதிகள் உண்டு.

5 பில்லியன் ரூபா செலவில் நவீன்தொழில்நுட்பத்துடனான CCTV பாதுகாப்பு திட்டத்துடன் இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலையை அங்கிருந்து அவதானிப்பதுடன் கொழும்பிலிருந்தும் அவதானிக்கக்கூடிய வசதிகள் இதில் உண்டு.

கைதிகளுக்கான வைத்தியசாலை தொழிற்பயிற்சி மத்தியநிலையம் , விளையாட்டு மைதானம், கைத்தொழில் பிரிவு , அதிகாரிகளுக்கான வீட்டு வசதி, கேட்போர் கூடம், சிற்றுண்டிசாலை, வங்கிககிளை , அங்காடிசந்தை , பார்வையாளருக்கான மண்டபம் என்பன இதில் உண்டு.

Source : News.lk