Latest Updates

நோய் தீர்க்கும் அருமருந்து பேரீச்சை..!

Related image

அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய சத்து நிறைந்த பழம் பேரீச்சை. வெப்ப மண்டலத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பேரீச்சையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன.

அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய சத்து நிறைந்த பழம் பேரீச்சை. வெப்ப மண்டலத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பேரீச்சையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி5 மற்றும் ஏ1, சி மற்றும் புரத சத்துகள், நார் சத்துகள் மட்டுமல்லாமல் இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், சர்க்கரை போன்ற சத்துகளும் அபரிமிதமாக காணப்படுகிறது.

 குறிப்பாக, பேரீச்சையில் உள்ள சர்க்கரை எளிதில் உடம்பில் சேரக்கூடியது என்பதால், உடனடி சக்தியும், தெம்பும் தரக்கூடியது. எளிதாக செரிமானம் ஆகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றை சர்க்கரை நிறைந்தது பேரீச்சை. மேலும், சூரிய சக்திகள் இருப்பதால் இது மனித தசைகளை வலுப்படுத்தக்கூடியது. இதன் அடிப்படையில்தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிடுகிறார்கள்.

Related image

பேரீச்சம் பழத்தை அரைத்து பாலுடன் கலந்து ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். குடல் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உள்ளது. இதன் அடிப்படையில், பெருங்குடல் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை முக்கிய பணியாற்றுகிறது.

மேலும் இதில் உள்ள டேனின்ஸ் என்னும் நோய் எதிர்ப்பு பொருளானது நோய் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது. வைட்டமின்-ஏ அதிகம் இருப்பதால், கண்பார்வை கோளாறு நீங்குகிறது. குடல் ஆரோக்கியம், சரும நலன் காக்கிறது.

 ரத்த இழப்பை ஈடுகட்டவும், சிவப்பணுக்களை அதிகரிக்கவும் பேரீச்சம்பழச்சாறு உதவும். இரவு உணவு உண்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு 3 பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வெது வெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

Image result for date salad

பேரீச்சம்பழத்தில் சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம், மூட்டுவீக்கம் குணமாகும். தினமும் 4 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, அஜீரண பேதி, மலச்சிக்கல், அமீபியா தொந்தரவு போன்ற வயிற்று கோளாறு நீங்கும்.

பேரீச்சம் பழத்தின் கொட்டையை வறுத்து பொடி செய்து பால், சர்க்கரை சேர்த்து காபி போல அருந்தி வந்தால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். கொட்டைகளை நீக்கி வெறும் பழங்களை பாலில் போட்டு காய்ச்சி ஆறியதும் குடித்து வந்தால் சளி, இருமல் குணமாகும். குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை பால் சேர்த்து அரைத்து குடிக்க கொடுத்து வந்தால் ஊட்டச்சத்து கிடைக்கும்.

கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்கள் காலை, மாலை என இந்த பேரீச்சம்பழம் பாலை அருந்தி வந்தால் எலும்பு வலுவடையும். குறிப்பாக, முதியோரை தாக்கும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

முதியோருக்கு வரும் பல்வேறு இன்னல்களையும் நீக்கும். இது, இளைப்பு நோயை குணப்படுத்துவதுடன், முதியோருக்கு ஏற்ற உணவாக உள்ளது. ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதுதொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு எலும்பு தேய்மானம், கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும்.

Related image

தினமும் காலை, மாலை நேரங்களில் வெறும் வயிற்றில் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் இதுபோன்ற பிரச்னைகள் குறையும். மெனோபாஸ் காலக்கட்டத்தில் அதாவது 45 முதல் 52 வயது வரையிலான காலக்கட்டத்தில் பெண்களின் எலும்புகள் பலவீனமாகும்.

கை, கால் மூட்டுகளில் வலி ஏற்படும். இதை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பழத்துடன் பால் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இது, பொதுவான உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும். பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பை சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் நரம்புதளர்ச்சி நீங்கும்.

ஞாபக சக்தி அதிகரிக்கும். கை,கால் தளர்ச்சி நீங்கும். ஆட்டுப்பாலுடன் பேரீச்சம் பழத்தை சேர்த்து இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்யம் மேம்படும். பேரீச்சையுடன் முந்திரி பருப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, குடித்து வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

கண்ணாடி பாட்டிலில் விதையில்லாத பேரீச்சம் பழங்களை போட்டு, சுத்தமான தேன் ஊற்றி மூன்று நாள் வரை ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் தினமும் காலை மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்குழாய் அடைப்பு நீங்கிவிடும். கருவுற்ற தாய்மார் தினமும் நான்கைந்து பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

Source : Tamil Times