மனிதா உன்னால் முடியும்..!

Image result for Soichiro Honda

மனிதா உன்னால் முடியும்...

தோல்வியை தற்கொலை செய்யவைத்த மாமனிதர் சாயிக்ரோ. வாழ்வில் பல தடவை தோற்றும் முயற்சியை கைவிடாத வெற்றி நாயகன்.

சாய்க்ரோவின் 18வது வயதில் தனது தந்தையாலே ஒன்றிற்கும் உதவாதவன் என ஒதுக்கபட்டான். படிப்பிலும் தோல்வி. சாய்க்ரோ முடியும் என முயற்சி செய்தான் TOYOTA நிர்வனதிற்கு பிஸ்டனை தயாரிக்க முயற்சி செய்தான். தன்னிடம் இருந்த அணைத்து பணத்தையும் முதலிட்டு ஒரு வருட முயற்சியில் பிஸ்டனை தயாரித்தார்.
ஆனால் TOYOTA அதனை நிராகரித்தது. சாய்க்ரோவை பார்த்து எல்லோரும் கேலி செய்தனர் உன்னால் முடியாது என கூறினர், ஆனால் சாய்க்ரோ முயற்சியை கைவிடவில்லை. மீண்டும் முயன்று பல வருட உழைப்பில் பிஸ்டனை கண்டுபிடித்தார்.  TOYOTAவில் காண்பித்தார். TOYOTA நிர்வனமும்  ஏற்றுக்கொண்டது.

பிஸ்டன் தயாரிக்க பாரியதொழிற்சாலை தேவைப்பட்டது. ஜப்பான் 2ம் உலகபோரிற்கு தயாராக இருந்ததால் சீமென்ட் இல்லாத நிலை. தொழிற்சாலை கட்ட சீமென்ட் இல்லாத நிலை. சிமெண்ட்க்கு பதிலாக சிமெண்ட் கலவையை கண்டுபிடித்து, தொழிற்சாலை கட்டினார். சில நாட்களுகளில் 2ம் உலக  போரில் அமெரிக்கா வீசிய குண்டில் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டது.

சாய்க்ரோவின் வாழ்க்கை முடிந்தது என மக்கள் கூறினர். மீண்டும் முயன்று கடன் பெற்று தொழிற்சாலை கட்டினார். ஜப்பானில் ஏட்பட்ட நில நடுக்கத்தில் மீண்டும்  தொழிற்சாலை நொறுங்கி தரைமட்டமாக்கப்பட்டது.

சாய்க்ரோவை இராசியில்லாதவன் என கூறினர். துவண்டுவிடவில்லை சாய்க்ரோ. ஒரு நாள் தனது சைக்கிளை பார்த சாய்க்ரோ புது முயற்சியில் இறங்கினார். புல்வெட்டும் இயந்திரத்தில் இருந்த மோட்டாரை சைக்கிளில் பொருத்தி மோட்டார் சைக்கிளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மோட்டார் சைக்கில் தொழிற்சாலை உருவாக்க வங்கிளிடம் கடன் கேட்டார் வங்கிகல்   மறுத்துவிட்டது. முயற்சியை கைவிடாத சைக்ரோ சைக்கிள் நிர்வனங்களின் உதவியடன் தொழிற்சாலை ஆரம்பித்தார்.

உலகம் போற்றும் நிர்வனத்தின் நிர்வனரானார். தன்னை புறக்கணித்த TOYOTAவின் போட்டி நிர்வனமாக தனது நிர்வனத்தை உயர்தினார். ஆம் இவரின் முழுப்பெயர் சாய்க்ரோ HONDA. இப்போது உங்களுக்கு தெரியும் இவர் யார் என்று. ஆம் இவர்தான்  உலகில் முதன்மை நிர்வனமான HONDA நிர்வனத்தின் அதிபதி Soichiro HONDA.

சாய்க்ரோவின் இறுதி வரிகள் "Success represents the 1% of your work
Which results from the 99% failure"
- Soichiro Honda-

மனிதா உன்னாலும் முடியும்...

(இப்பதிவு மாணவர் உலகம் WhatsApp குழுவில் பகிரப்பட்டது)
Previous Post Next Post