மாணவனின் திறமையால் தாயொருவருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு.

Image result for சிதிஜ நிரான்

தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவனின் திறமை காரணமாக, அவரது தாயாருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த வருடம் 5ஆம் தர புலமைப்பரீசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பிடித்த மாணவனின் தாயாருக்கு தொழில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராஜபுத்ரவினால், குறித்த தாயாருக்கு தொழில் வாய்ப்பு ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை ஊருகடுவ மெதடிஸ் பாடசாலையில் கல்வி பயின்ற சிதிஜ நிரான் 2016ஆம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பிடித்தார்.

இதனையடுத்து கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி நடவடிக்கையை தொடர வாய்ப்பு வழங்கப்பட்டது.

அவரது கல்வி நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி நிலையை தீர்த்துக் கொள்ள மாணவனின் தாயாருக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Previous Post Next Post