• Latest Updates

    Thursday, October 19, 2017

    விவசாயிகளுக்கும் புதிய விவசாயக் காப்புறுதித் திட்டம்..!



    விவசாயிகளுக்கு புதிய விவசாயக் காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இது தொடர்பான ஆலோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் வி.விஜயரத்ன தெரிவித்தார். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் புத்திஜீவிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

    தற்போதுள்ள விவசாய காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபா மாத்திரமே இழப்பீடு வழங்கப்படுகிறது.இதற்காக 150 ரூபா  வீதம் தவணைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

    புதிய காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டயருக்கு 40 ஆயிரம் ரூபாவை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1300 ரூபா வீதம் தவணைக் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் 675 ரூபாவை தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியம் செலுத்தும். எஞ்சியுள்ள 675 ரூபா தொகையை குறிப்பிட்ட விவசாயியிடமிருந்து அறவிட திட்டமிடப்பட்டுள்ளது என்று  அமைச்சின் செயலாளர் வி.விஜயரத்ன தெரிவித்தார்.

    Source : News.lk
    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews