Latest Updates

மாணவர் சமுதாயத்தை குறிவைக்கும் மன அழுத்தம்...


இன்றைய கடினமான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்னையாக உள்ளது. குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்தினர் மன அழுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தம் உடல் நலனை பெரிதும் பாதிக்கிறது. யோகா, தியானம் போன்ற மனதை லேசாக மாற்றும் தன்மையுடைய பயிற்சி முறைகளை கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் தேவை.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இதுபோன்ற வழி முறைகளை கடைப்பிடிப்பது நன்மை அளிக்கும். அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் யோகா உள்ளிட்ட மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள் வழங்க வேண்டியது இன்றியமையாதது. பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகளில் முடிக்கப்படாத பாடங்களை நடத்தி முடிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற வகுப்புகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கி புத்துணர்வு அளிக்கும் என்பதை புரிந்து கொண்டு யோகா, விளையாட்டு போன்றவைகளுக்கு தனித்தனியே தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உளவியல் வல்லுனர்களின் ஆலோசனை.

Source : News.lk