Latest Updates

காட்டுப்பகுதியில் போர்த்துக்கேயர் கால கட்டிடம் கண்டுபிடிப்பு..!

z_p06-Prehistoric-02

போத்துக்கேயர் காலப்பகுதியில் கட்டப்பட்ட கட்டிட நிர்மாணம் ஒன்று கேகாலை மாவட்டத்திலுள்ள தெஹியோவிற்ற தொகுதியில் பனாவல மடகம்மான என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

80a9877ee75b0796117cb07a9c84eec6_XL

குறித்த பிரதேசத்தில் உள்ள காட்டுபகுதியில் இது தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய தொல்பொருள் பணிப்பாளர் பி.மண்டவெல தெரிவித்தார்.

1515 – 1540ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட சீத்தாவக்கபுர காலப்பகுதியில் சப்ரகமுவ பிரதேசத்தை கண்காணிப்பதற்காக இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source : News.lk