• Latest Updates

    Monday, October 16, 2017

    எதிர்வரும் சில தினங்களில் கடல் கொந்தளிப்பு..!

    Image result for கடல் கொந்தளிப்பு

    நாட்டின் தென்மேற்கு பிரதேச வளிமண்டலத்தில் நிலவிய தளம்பல் நிலையினால் குறைந்த தாழமுக்கம் இந்த பிராந்தியத்தில் வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலமான அழுத்தம் வலுவடைந்து வருவதனால் மத்திய வங்காள விரிகுடாவின் கடற்கரையோரப்பிரதேசத்திலிருந்து வடமேல் திசையை நோக்கி நகரும் என்பதினால் எதிர்வரும் சில தினங்களில் வானம் கருமுகில்கள் நிறைந்ததாக காணப்படும்.

    வங்காள விரிகுடா கரையோரப்பிரதேசத்தில் கடும் மழையுடன் காற்றும் வீசக்கூடும். இதன்போது கடலும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான பொத்துவில் வரையிலும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இப்பகுதிக்குட்பட்ட கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

    ஏனைய கடல் பகுதியில் காற்றின் வேகம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும். இது தொடர்பில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோரும் கடற்றொழிலாளர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Source : News.lk
    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews