Latest Updates

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்.

Related image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

டெங்கு ஒழிப்பு உதவியாளர்களாக மேலும் ஆயிரத்து 500 இணைத்துக் கொள்ளப்பட உள்ளார்கள்.

தற்சமயம் நிலவும் மழையுடன்கூடிய காலநிலையினால் நுளம்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களிலும் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுற்படுத்தப்பட இருக்கின்றது. முப்படையினரும் பொலிசாரும் இதில் பங்கேற்க இருக்கின்றார்கள் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறினார்.

Source : News.lk