Latest Updates

சப்ரகமுவ அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பு..!

Related image

சப்ரகமுவ மாகாணத்தில் காணப்படும் பல்வேறு அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு பொருத்தமான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகவல் தொடர்பாடல் உதவியாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், சிறுவர் காப்புறுதி மற்றும் சமூக சேவை திணைக்களத்திற்கு ஆலோசகர் ஆகிய பதவிகளுக்கே தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை இம்மாதம் 31ம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைப்பதனூடாக அரச உத்தியோகத்திற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை சப்ரகமுவ மாகாண அரச சேவை ஆணைக்குழு அலுவலகம், சப்ரகமுவ மாகாணசபை கட்டிடம், புதிய நகரம், இரத்தினபுரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Source : velaiththalam.lk