Monday, October 23, 2017

இன்று முதல் யால தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்படும்..!



இரண்டு மாத காலத்திற்கு மேலாக மூடப்பட்டிந்து யால தேசிய பூங்கா இன்று முதல் மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்படுகின்றது.

வனவிலங்குகளின் தேவைக்காக ஒவ்வொருவருடமும் குறிப்பிட்ட காலத்திற்கு இது மூடப்படுவது வழமை . இது தேசியப்பூங்காவாக 1938 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் எல்லைப்பபகுதியில் அமைந்துள்ள இந்த பூங்கா 978 கிலோமீற்றர் பரப்பை கொண்டது. இங்கு கரடி, மான் , காட்டுயானைகள் உள்ளிட்ட மிருகங்களை போன்று பல விசேட பறவைகளும் உண்டு. இலங்கைக்கு முக்கியமான விலங்குகள் பல இங்கு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Source : News.lk
SHARE

0 coment�rios: