Latest Updates

இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் தொடரும் மழையுடன் கூடிய காலநிலை..!


Image result for rain in india

நாட்டில் மேக மூட்டம் மற்றும்  தொடரக்கூடும் என்று  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடல் பிரதேசங்களில் வலுவான காற்றை எதிர்பார்கலாம். மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர்  மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 இதேவேளை தமிழகத்தில் 3 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட 111 சதவீதம் அதிகம் பெய்யும்  என்று வானிலை நிலையம்   குறிப்பிட்டுள்ளது.

 தென்மேற்கு பருவமழையும் இயல்பைவிட 29 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. அதேபோல், நாளை ஆந்திர கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்து தமிழகம் நோக்கி வந்தால் இங்கு கடும் மழை பெய்யும். தற்போது பருவமழை நேரம் என்பதால் எந்த நேரத்திலும் கனமழை பெய்யலாம் என்பதால் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளது.

தற்போது வளிமண்டல மேலடுக்கில் நிலவி வரும் சுழற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புயலுக்கு வாய்ப்பு இல்லை. தீபாவளி வரும் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த சமயத்தில் தமிழகத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில், 'தமிழகத்துக்கு தற்போது புயல் வர வாய்ப்பு இல்லை. நாளை ஆந்திரா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றார்.

Source : News.lk