தேசிய விஞ்ஞான தினம் மற்றும் தேசிய விஞ்ஞான வாரம்.

Related image
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 10ம் திகதி 'உலக விஞ்ஞான தினம்' அனுஷடிக்கப்படுகின்றது. 

அதற்கு நிகராக இலங்கையில் 'தேசிய விஞ்ஞான தினம்' மற்றும் 'தேசிய விஞ்ஞான வாரம்' என்பவற்றை அனுஷடிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறையின் விருத்தியினை இலக்காகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 10ம் திகதி 'தேசிய விஞ்ஞான தினம்' எனவும், அத்தினத்துடன் ஆரம்பமாகும் வாரத்தினை 'தேசிய விஞ்ஞான வாரம்' ஆகவும் பிரகடனப்படுத்துவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

- அமைச்சரவைத் முடிவுகள் (2017.10.10)

Previous Post Next Post