யாழ்ப்பாணத்தில் தேசிய தமிழ் தின விழா.. பிரதம அதிதியாக ஜனாதிபதி..!


தேசிய தமிழ் தின விழா இன்று மற்றும் நாளை (14, 15) இடம்பெறவுள்ளதுடன்  பாடசாலைகளின் கலாசார விழாவும் பிரமாண்டமாக யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் 9 மாகாணங்களினதும் ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்ககள் தெரிவித்தனர்.

யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து யாழ்.இந்துக் கல்லூரி வரையில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு ஒழுங்கமைக்கப்பட்டுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழ் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குவார். தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகள்  மாலை 7 மணி வரையில் நடைபெறும்.

இதனோடு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சுகி சிவம் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் நடைபெறும்.

தகவல்: ஷான் சதீஷ்
Previous Post Next Post