குருநாகல் கெகுணுகொல்ல தேசிய பாடசாலையின் தொழிநுட்பக் கண்காட்சி.


குருநாகல் மாவட்டத்திலும் அகில இலங்கை ரீதியிலும் பிரசித்திபெற்ற கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் தொழிநுட்பப் பிரிவு மாணவர்களின் கண்காட்சி 2017.10.16 திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.  இக்கண்காட்சிக்கு அமைவாக மாணவர் விடுதியின் அடிக்கல் நாட்டு விழாவும், CCTV உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அல்ஹாஜ் முதம்மில் அவர்களின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில் தொழிநுட்பப் பிரிவு மாணவர்களின் கண்காட்சியானது தொடர்ச்சியாக இன்று (18) வரை நடைபெறுகிறது.

இதன் ஆரம்ப நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் இரண்டு மாடி கட்டிடம் கட்டுவதற்காக உதவி செய்யும் சமூக சேவையாளர் சலாஹுதீன் முஸ்லிம் அவர்களும், பாடசாலைக்கான CCTV உபகரணங்களை வழங்கும் சமூக சேவையாளர் அல்ஹாஜ் தாரிக், முன்னால் மாகான சபை உறுப்பினரும் சதோச பிரதித்தலைவருமான எம்.என்.நஸீர், கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைக்கான பணிப்பாளர் இர்ஷான், முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் இர்பான், றிபாய், இல்ஹாம் சத்தார், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம்.


தகவல் : Dilshan Mohamad
Previous Post Next Post