Thursday, October 19, 2017

இலங்கை புகையிரத சேவையில் GPS தொழிநுட்பம் அறிமுகம்..!

Image result for gps train

உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (GPS) தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் புகையிரத செயற்பாட்டு திறனை விருத்தி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு புகையிரதம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 13)

உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (GPS) தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் புகையிரத திணைக்களத்தின் கொழும்பு, அநுராதபுரம் மற்றும் நாவலப்பிட்டிய கட்டுப்பாட்டு நிலையங்களை ஒன்றிணைத்தல், சுயமாக புகையிரத கால அட்டவணையினை தயாரித்தல், புகையிரத கட்டுப்பாடு தொடர்பான சகல விடயங்களையும் சேமித்து வைத்தல், புகையிரத தாமதங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்தல் போன்ற விரிவான விடயங்களை உள்ளடக்கும் வகையில் புகையிரத செயற்பாட்டு திறனை விருத்தி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு புகையிரதம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேலும் செவ்வனே நிறைவேற்ற முடியும். இதனை கவனத்திற் கொண்டு குறித்த பிரிவினை தொடர்ந்தும் விரிவுபடுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் அடிப்படையில் 31.8 மில்லியன் ரூபா செலவில் உரிய பிரிவினை பெற்றுக் கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

- அமைச்சரவை முடிவுகள் (2017.09.26)

SHARE

0 coment�rios: