Thursday, November 2, 2017

சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்..!



வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக தங்கியிருந்து சிகிச்சை பெறும் மாணவர்களின் கல்வியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைவாக மகரகம அபெக்ஸ்சா வைத்தியசாலை உள்ளிட்ட விசேட வைத்தியசாலைகளில் ஒருவருட காலத்திற்கு ஆசிரியர்களை ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒருவருட காலத்திற்கு கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் ஐவர் தமது கடமைகளை பூர்த்தி செய்துள்ளனர். மேலும் ஒருவருடத்திற்கு புதிதாக ஐந்து ஆசிரியர்கள் கடந்த 31 ஆம் திகதி  இணைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நாளந்தா கல்லூரியை சேர்ந்த ஆசிரியர் சிலர் றிஜ்வே வைத்தியசாலையில் தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கள மொழி பாடசாலை ஆசிரியர்கள் நால்வரும் தமிழ் மொழி ஆசிரியர் ஒருவரும் கடமைபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source : News.lk
SHARE

0 coment�rios: