Latest Updates

யாழ் உணவு திருவிழா 2017..!



அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கையின் கீழ் பாதுகாப்பு படையினாரால் யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலாபத்தை நோக்காக கருதாது இந்த நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இந்த யாழ் உணவு திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.

யாழ்மாவட்ட மக்களின் உணவு வகைகள் இதில் இடம்பெறவுள்ள இந்த விழா எதிர்வரும் 17ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாத்துறையினரை ஈர்க்கும் வகையில் இது ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Source : News.lk