• Latest Updates

    Thursday, December 14, 2017

    நெசவு மற்றும் ஆடைத்தொழிற்சாலைத் துறையில் NVQ தகுதி..!



    அடுத்த வருடத்தில் இலங்கை நெசவு மற்றும் ஆடைத்தொழிற்துறை நிறுவனங்கள் மூலம் நெசவு மற்றும் தொழிற்நுட்ப கற்கைநெறிக்காக இதுவரை நடத்தப்பட்டு வந்த உயர்தர டிப்ளோமாவிற்கு பதிலாக தேசிய NVQ தகுதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

    இலங்கை நெசவு ஆடைத்தொழிற்துறை மற்றும் பாதணி தயாரிப்பு தொழிற்துறையில் பயிற்சியை வழங்கும் உயர் நிறுவனங்களில் ஒன்றான நெசவு மற்றும் ஆடைத்தொழிற்துறை நிறுவனம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற மதிப்பீட்டு கூட்டத்திலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

    இலங்கை நெசவு மற்றும் ஆடைத்தொழிற்துறை நிறுவனமான SLITA இவ்வருடத்தில் ஆகஸ்ட் மாதம் அளவில் நடவடிக்கையின் மூலமான மொத்த வருமானமாக 126 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளது.

    இந்த நிறுவனத்தில் 68 பயிற்சி வேலைத்திட்டங்களை நடத்த முடிந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    இலங்கை நெசவு மற்றும் ஆடைத்தொழிற்துறை நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த வருடத்தில் 220 மாணவர்களுக்கு ஆடைததொழிற்துறையில் பதிவுசெய்வதற்கான தகுதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

    Source : News.lk
    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews