அரச சேவையில் மேலும் 3,000 மொழிபெயர்ப்பாளர்கள்..!


அரச சேவையில் மேலும் 3,000 மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதற்கவேண்டி சமர்ப்பிக்கப்பட்ட  அனுமதிப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் முதல் கட்டமாக 500 மொழிப் பெயர்ப்பு அதிகாரிகளுக்கு நியமங்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்வரும் தகைமைகளையுடையவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்:

- க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு மொழிகளிலும் சித்தி
- க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று படங்களில் சித்தி.

Previous Post Next Post