Monday, March 5, 2018

அரச முகாமைத்துவ சேவையில் 6,000 பேரை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்..!

https://tamil.news.lk/media/k2/items/cache/57c4fae1846f1f5f9074209fdcba74d0_XL.jpg
அரச முகாமைத்துவ சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
அரச முகாமைத்துவ சேவையில்இ ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. 
இதற்கான நேர்முகப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நேர்முகப்பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
நேர்முகப் பரீட்சைஇ அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில்  இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி  வரை நடைபெறும் என்று  அரச இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்தார்.
நேர்முகப் பரீட்சையின் பின்னர்இ இவர்கள் சேவையில் துரிதமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அரச இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி.கமகே மேலும் கூறினார்.

Source: news.lk
SHARE

0 coment�rios: