ஆசிரியர் இடமாற்றம் - கடிதங்கள் அனுப்பிவைப்பு.

Related image

இம்மாத இறுதியில் இடம்பெறவிருந்த ஆசிரியர் இடமன்றத்திற்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

___________________

10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதியில் இடமாற்றம்..!

ஒரே பாடசாலைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக தரம் 6க்கும் 11க்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த ஐயாயிரத்து 473 ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

மூன்று கட்டங்களின் கீழ் தேசிய பாடசாலைகளுக்கான இந்த ஆசிரிய இடமாற்றம் அமுல்படுத்தப்பட இருக்கிறது. இதன் முதல் கட்டம் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றது.
 
உயர்தரப்பரீட்சையில் உயர்தர வகுப்புக்களில் ஆசிரியர்களாக பணியாற்றிய இரண்டாயிரத்து 590 ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இரண்டாம் கட்டம் இவ்வருடத்தின் முதல் பகுதியில்; ஆரம்பிக்கப்பட்டது. இதில் தரம் ஒன்றுக்கும், ஐந்துக்கும் இடைப்பட்ட வகுப்புகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக சேவையாற்றிய ஆயிரத்து 441 ஆசிரியர்களில் 760 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. 

ஆனால் கடந்த ஆண்டில் தரம் ஒன்றிற்கும், மூன்றிற்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post