கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளுக்கு முன்னுரிமை..!

Related image

கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் போன்ற துறைகளுக்கு முதலிடம் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இடம்பெற்ற அகில இலங்கை கணித நுண்ணறிவுப்போட்டி மற்றும் தேசிய ஒலிம்பியாட் போட்டி என்பவற்றில் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு  தெரிவித்தார்.
  
மேற்கூறப்பட்ட துறைகளில் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் அதிக தொழில்வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனினும் நாட்டில் கல்விமுறையில் குறித்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மிகவும் குறைவு. கல்வித்துறையில் முன்னோக்கிச் செல்ல குறித்த துறைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம்.
கணித விடயத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு அவசியமான  பிற்புலத்தை உருவாக்குவது. கணித விடய அபிவிருத்திக்காக சர்வதேச ஒத்துழைப்பு வலையமைப்பை கட்டியெழுப்புதல் மற்றும் கணித விடம் அறிவு தொடர்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என இருதரப்பினருடைய அறிவையும் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அமைச்சின் கணித பிரிவு அகில இலங்கை கணித நுண்ணறிவுப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டியில் திறமைகளை வௌிப்படுத்திய  மாணவர்களுக்கு கல்வியமைச்சர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
Source : அரசாங்க தகவல் திணைக்களம்

 
Previous Post Next Post