Latest Updates

இலங்கையில் புதிய தேசிய பாடசாலைகளை உருவாக்க பரிந்துரை..!

Image result for national schools in sri lanka

புதிய முறையிலான தேசிய பாடசாலைகளை அமைப்பதற்கு அவசியமான கொள்கைகளை வகுக்குமாறு அமைச்சரவை கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது இலங்கையில் 353 தேசிய பாடசாலைகள் உள்ளன. இதற்கு மேலதிகமாக தேசிய பாடசாலைகளை உருவாக்க தேவையான வரையறைகளை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு அமைச்சரவை அறிவித்துள்ளது.

ஏற்கனவே நாட்டிலுள்ள சில தேசிய பாடசாலைகள் உரிய தகைமை இல்லாத நிலையில், மேலதிகமாக புதிய தேசிய பாடசாலைகளை அமைப்பது தேவையற்றதாகவே அமைச்சரவையில் இருந்து பெரும்பாலானோரின் கருத்தாக அமைந்தது.

ஆதாரம் : Daily Ceylon