கடலுக்கடியில் அமைந்திருக்கும் பிரமாண்டமான அதிசய உலகம்..!

Related image

பொதுவாக அருங்காட்சியங்கள் என்பன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை காட்சிப்படுத்துவதற்காகவே அமைக்கப்படுகின்றன.

எனினும் ஓர் வித்தயாசமான நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட கடலுக்கடியில் இருக்கும் இந்த பிரமாண்டமான அருங்காட்சியகத்தை பற்றி நீங்கள் அறிவீர்களா?

மெக்ஸிகோ நாட்டில் கன்கன் எனும் இடத்திலேயே இந்த பிரமாண்டமான கடலடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. (MUSA -Cancún Underwater Museum).

Image result for Cancún Underwater Museum

இவ்விடத்தில் முன்னைய காலங்களில் கண்ணைக்கவரும் பல பவளப் பாறைகள் இருந்துள்ளன. எனினும் அதிகரித்துவரும் முத்துக் குளிப்போராலும், அதிக சுற்றுலாப்பயணிகளின் வருகையி னாலும் இப் பவளப்பாறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

Related imageRelated image

இப்பவளப்பாறைகளை காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட வினோதமான முடிவுதான் இப்பிரமாண்டமான அருங்காட்சியகம். 2009 ஆண்டில் தொடங்கி 2013 ஆம் ஆண்டிலேயே இந்த அருங்காட்சியகதின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டன.

கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த அருங்காட்சியகம் தான் செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கடலடி அருங்காட்சியமாகும்.

Image result for musa underwater museum cancunImage result for musa underwater museum cancun
Image result for musa underwater museum cancunRelated image

MUSA எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் சுமார் 500 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலுக்கடியில் 6 மீட்டர் வரை ஆழத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இச்சிலைகளில் பலவும் மெக்ஸிகோவின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பனவாகக் காணப்படுகின்றன.

420 சதுரகிலோமீட்டர் கடலடி நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இச் சிலைகள் அனைத்தும் கடலின் இயற்கை சூழலை பாதிக்காத வண்ணமும், உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.

Related image

சுமார் 1 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருடம்தோறும் இங்கு வந்து செல்கின்றனர்.  கடலின் இயற்கை சூழலை பதுக்கப்பதற்காக இச்சிலைகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் வெற்றிபெற்றுள்ளதாகவே கருதப்படுகிறது.

Previous Post Next Post