வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை 16ஆம் திகதி ஆரம்பம்..!


Interview: வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை 16ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பம்..!

நாட்டிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ள அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இதற்கமைய சென்ற வருடம் ஓகஸ்ட் மாத பத்திரிகை அறிவித்தலுக்கு ஏற்ப விண்ணப்பித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட மட்ட நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்நேர்முகப் பரீட்சைகள் குறித்த மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் நடைபெறவுள்ளன. இது தொடர்பாக விண்ணப்பதாரிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் எழுத்து மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

கொழும்பு  மாவட்ட நேர்முகப் பரீட்சைகள் கொழும்பு மாவட்ட செயலகம் மற்றும் மஹரகம பிரதேச செயலகத்தில் நடைபெறும்.

காலி மாவட்ட  நேர்முகப் பரீட்சைகள் கோல்டிஹோல் மண்டபத்திலும், அம்பாறை மாவட்ட நேர்முகப் பரீட்சைகள் ஹாடி உயர்தொழில்நுட்ப கல்லூரியிலும்,  அனுராதபுரம் மாவட்ட நேர்முகப் பரீட்சைகள் வலிசிங்ஹ ஹரிஷ்சந்திர மகாவித்தியாலயத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post