விண்ணப்பங்கள்: க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை - 2018


 2018 க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் மே மாதம் 15 திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சாத்திகளுக்கான விண்ணப்பங்கள் குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவில்லையெனின், பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் பரீட்சாத்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் இன்றைய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

மாதிரி விண்ணப்பப் படிவத்தை பெற இங்கே அழுத்துங்கள் - Application


பாடசாலைகளில் இருந்து விலகியவர்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியும் எனவும் பாடசாலை மாணவர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது சட்ட விரோத செயல் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இவ்விதிமுறையை மீறும் பட்சத்தில் அவ்வாறான பரீட்சாத்திகளுக்கு பரீட்சை தடைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: அரசாங்க செய்தி இணையதளம்.
Previous Post Next Post