கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிதாக 4,745 மாணவர்கள் அனுமதி..!


இலங்கை கல்வியியல் கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் புதிதாக மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகப் பரீட்சைகள்  முடிவடைந்த நிலையில் 4,745 மாணவர்கள் இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக ஆசிரியர் கல்வி தலைமை ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வியியல் கல்லூரிகளில் 3 ஆம் வருட மாணவர்களுக்கு, தங்குமிட வசதிகளுடன் கூடிய பயிற்சிகள் பாடசாலைகளுடன்  ஒன்றிணைக்கப்பட்டு ஆரம்பிக்கப்படும்  எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 2015ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு ஏற்ப மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவதுடன், ஆரம்ப மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்காக கூடுதலான மாணவர்களை இம்முறை இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post Next Post