மேலதிக வகுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..!


தாம் நடாத்தும் மேலதிக வகுப்புகளில் கலந்துகொள்ள செய்வதற்காக வேண்டி மாணவர்களுக்கு சில ஆசிரியர்களினால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக பெற்றோரிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டை கருத்திற்கொண்டு அவ்வாறான ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விஷேடமாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு இவ்வாறான அழுத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், மேலதிக வகுப்புகளில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு குறிப்பிட்ட ஆசிரியர்களால் பாடசாலையில் இடையூறுகள் விளைவிக்கப்படுவதாகவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயங்களை கருத்திற்கொண்டு கல்வியமைச்சின் 1988 தொலைபேசி இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளவும், அவற்றிற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆதாரம்: அரசங்கள் செய்தி இணையதளம்.

Previous Post Next Post