மேல் மாகாணப் பாடசாலைகளில் நாளை விஷேட நிகழ்வு..!

Related image

மேல் மாகாணப் பாடசாலைகளில் நாளை விஷேட சிரமதானப் பணி இடம்பெறும் என மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்திட்டுள்ளது.

டெங்கு நுளம்பு ஒழிப்பு மற்றும் எதிர்வரும் வெசாக் வாரத்தினை முன்னிட்டு பாடசாலைகளை அலங்கரித்தல் போன்ற செயற்பாடுகளுக்காகவே பாடசாலைகளில் இச்சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரண்டாம் தவணைக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது பாடசாலைகள் சுத்தமாக இருப்பதற்கும் இது உதவியாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post