வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர அரச தொழில் வாய்ப்பு..!
நாடு முழுவதிலும் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு 2 வருட பயிற்சியின் பின்னர் நிரந்தர அரச தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான நேர்முகப்பரீட்சைகள் மாவட்ட ரீதியாக நாடுமுழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் தெரிவாகும் பயிலுனர்களுக்கு 2 வருட பயிற்சியுடன் மாதாந்தம் 20,000/- ரூபாவும் வழங்கப்படும்.

பயிற்சிக்கலாம் நிறைவடைந்ததும் நிரந்தர அரச சேவையில் இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.

ஆதாரம்: அரசங்கள் செய்தி இணைய தளம்.

Previous Post Next Post