எச்சரிக்கை: கடல் அலைகளில் மாற்றம்..!


பலபிட்டி, காலி, மாத்தறை வழியாக பொத்துவில் வரையுள்ள பிரேதசங்களில் கடல் அலை மட்டம் இன்று இரவு தொடக்கம் 2 இலிருந்து 3 மீட்டர் வரை உயர்வாகக் காணப்படுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலைமை இம்மாதம் 23ஆம் திகதி வரை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post Next Post