Latest Updates

G.C.E O/L : ஆங்கில பாடத்தில் 51% மாணவர்களே சித்தி..!

Related image

அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் படி கடந்த டிசம்பரில் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் 51% மாணவர்கள் மாத்திரமே அடைவு மட்டங்களை எய்தியுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பாடங்களுடன் ஒப்பிடுகையில் ஆங்கில பாடத்திற்கான அடைவு மட்டம் குறைவாக இருப்பதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆங்கில பாடத்தில் ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் சாதாரண சித்தியை பெற்றுள்ளார்கள். 31 ஆயிரத்து 619 பேர் அதிவிசேட சித்தியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source : News.lk