ஏன் நீங்கள் பிற மொழிகளை கற்க வேண்டும்?


ஏன் நீங்கள் பிற மொழிகளை கற்க வேண்டும்?

1. தன்னம்பிக்கை 

நீங்கள் பிற மொழிகளை கற்கும் போது உங்களின் மேல் உள்களுக்குள்ள தன்னம்பிக்கை மேலும் வலுவடையும். குறித்த மொழி பயன்பாட்டில் உள்ள எந்தவொரு இடத்திலும் எந்த சூழ்நிலையையும் சமாளித்து செல்லக்கூடிய ஆற்றலை பெறுவீர்கள்.

2. சிறந்த முடிவெடுக்கும் தன்மை

ஆய்வுகளின் படி ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளை அறிந்து வைத்திருப்பவர்கள் சிறந்த முடிவுகளை எடுக்கும் தன்மை கொண்டவர்களாக அறியப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் இவர்களிடம் ஒப்பிடும் தன்மை மற்றும் ஆராயும் இயல்புகள் அதிகம் என்பதேயாகும்.

3. அதிகரிக்கும் கிரகிக்கும் திறன். 

கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்த்த பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், குறித்த பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மொழிகளை கற்கும் மாணவர்கள் தாய் மொழியை மட்டும் தெரிந்த மாணவர்களை விட அதிக மதிப்பெண்களை பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மூளையில் தகவல் சேமிக்கும் 'grey matter' பகுதியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


4. புது மனிதர்கள் மற்றும் புது கலாச்சாரங்கள்.

நீங்கள் பிற நாட்டு மொழிகளை அறிந்து வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கு பல்வேறுபட்ட மனிதர்களையும் கலாச்சாரங்களையும் பற்றி அறியும் வாய்ப்பும் கிடைக்கிறது.

5. கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்கள்

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காகச் செல்லும் பலருக்கு ஆங்கிலத்துடன் சேர்த்து குறித்த நாட்டு மொழியையும் தெரிந்து வைத்திருப்பதென்பது கட்டாயம் வேலைவாய்ப்பு அல்லது கல்வி நடவடிக்ககைக்கான ஓர் முக்கிய தகைமையாகக் கருதப்படும். இதன் மூலம் குறித்த தொழில் வாய்ப்பினை அல்லது பல்கலைக்கழக அனுமதியை இலகுவில் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே வாழ்நாளில் தாய்மொழிக்கு மேலதிகமாக குறைந்து ஒரு மொழியையாவது கற்றுக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்? எந்தெந்த மொழிகளை கற்க ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை பற்றி கீழே Comment இல் பதிவிடுங்கள்.
Previous Post Next Post