கடலினுள் மூழ்கடிக்கப்படும் மைக்ரோசொப்டின் தரவுக் களஞ்சியம்..!


பல பரிசோதனைகளை மையமாகக் கொண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது தரவுக் களஞ்சியமொன்றினை ஸ்காட்லாந்தின் ஒர்க்கினி தீவுகளின் அருகில் கடல் அடியில் நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தரவுக் களஞ்சியங்களில் இருந்து வெளிவரும் அதீத வெப்பத்தினை கட்டுப்படுத்தி அவற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க ஏற்படும் செலவுகளை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் எனவும் அந்நிறுவனம்  தெரிவித்துள்ளது. இங்கே அதி நவீன 12 கணினிகள் பொருத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இக்கணணிகள் கடலினடியே ஊடுருவிச் செல்லும் விஷேட கேபல் (கம்பி) மூலம் தரையுடன் தொடர்புபட்டிருக்கும்.


கடல் நீரின் மூலம் இத்தரவுக்களஞ்சியத்தின் வெப்பத்தினை கட்டுப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதெனினும், இங்கே உள்ள கணனிகள் செயலிலந்தால் அல்லது எதாவது ஒரு பகுதி பழுதடையும் பட்சத்தில் அதனை மீண்டும் சரிசெய்ய முடியாது.

இது தம்மால் மேற்கொள்ளப்படும் ஓர் முக்கிய ஆய்வு என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருத்தாலும், இது கடல் சூழலை பாதிக்கும் ஓர் விடயமெனவே பலரும் கருதுகின்றனர்.

படங்கள்:


Previous Post Next Post