கருப்புப் பணத்தை வறிய மக்களுக்கு வழங்கும் நாடு..!
முன்னைய இராணுவ ஆட்சியாளரான சானி அபாஷா ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தினை சுவிஸ் வங்கியில் இருந்து மீட்டு நாட்டிலுள்ள ஏழைகளுக்கு வழங்கும் திட்டத்தை நைஜீரிய நாட்டின் தற்போதை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பல ஏழைக் குடும்பங்கள் பயனடைவுள்ளதாகவும் நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னைய இராணுவ ஆட்சியாளர் கொள்ளையடித்த சுமார் 300 மில்லியன் டாலர்களை சுவிஸ் அதிகாரிகள் அடுத்த மாதமளவில் நைஜீரிய அரசாங்கத்திடம் திருப்பியளிக்க உள்ளனர். இத்தொகை அரசாங்கத்தினால் வறிய மக்களுக்கு பகிந்தளிக்கப்படவுள்ளது.
No comments