பாடசாலையை நடாத்த பதநீர் விற்கும் கிராமம்..!


இந்தியா:

தூத்துக்குடி அருகே அந்தோணியார்புரம் எனும் கிராம மக்கள் 15 வருடங்களாக பதநீர் விற்று தமது கிராமத்திலுள்ள பாடசாலையை நடாத்தி வருகின்றனர்.

அந்தோணியார்புரம் பாடசாலையில் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களுக்கு அரச நிதியுதவி கிடைக்குமெனினும், தரம் 6 முதல் 8 வரையான வகுப்புக்களுக்கு அரச நிதியுதவி கிடைப்பதில்லை. இதனை ஈடுசெய்யவே இக்கிராம மக்கள் இவ்வாறு பதநீர் விற்கின்றனர்.

இக்கிராமத்தில் அதிகமான பனை மரங்கள் காணப்படுவதால், இங்கே பனைமரங்கள் மூலமே அதிகமானோர் தமது வாழ்வாதாரத்தை உழைக்கின்றனர். பதநீரின் மூலம் கருப்பட்டி உற்பத்தி செய்து விற்ற இவர்கள், அதனால் கிடைக்கும் வருமானம் போதாமையினால் தொடர்ந்து பதநீரையே விற்கத் துவங்கியுள்ளனர்.

எனவே கிராம மக்கள் ஒன்றிணைத்து அணைத்து பனை தொழிலாளர்களிடமும் இருந்து தாமே பதநீரை கொள்வனவு செய்து மொத்தமாக விற்கின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தை கல்வி நடவடிக்கைகளுக்காக மட்டும் செலவழிக்கின்றனர்.

அந்தோணியார்புரம் பதநீருக்கென தனி வரவேற்பும் கிடைக்கின்றதாம்.
Previous Post Next Post