வேகத்தை குறைக்கும் பூமி... விட்டு விலகும் சந்திரன்..!பொதுவாக நாம் வாழும் இப் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தைக் குறிக்கும். ஆனால் தமது ஆராய்ச்சியின் படி, இற்றைக்கு சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் 18 மணி 41 நிமிடங்களே இப் பூமியில் ஒரு நாளாக இருந்தது என்கிறார்கள் ஒரு விஞ்ஞானிகள் குழு.

ஸ்டீபன் மேயர்ஸ் எனும் விஞ்ஞானி உட்பட ஓர் விஞ்ஞானிகள் குழு எழுதிய ஆய்வுக்கட்டுரையில் மேற்படி தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வருடம்தோறும்  ஒரு நாளின் கால அளவு ஒரு நொடியில் 74 பகுதி அளவுக்கு கூடிக்கொண்டே செல்கிறது. இதற்குக் காரணம் பூமி சுழலும் வேகதில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும் என அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்விஞ்ஞானிகள் குழு இன்னுமோர் ஆச்சரியமூட்டும் தகவலையும் தெரிவித்துள்ளனர்.

அதாவது, 140 கோடி ஆண்டுகள் இடைவெளியில் சந்திரன், பூமியிலிருந்து  44,000 கி.மீ., தூரத்திற்கு விலகிச் சென்றுள்ளது. இவ்வாறு சந்திரன் விலகிச் செல்வது தற்போதும் நடந்துகொண்டிருப்பதாக அவர்கள் மேலும் கண்டறிந்துள்ளனர்.
Previous Post Next Post