சீனாவில் Smart Phone பவிப்பவர்களுக்காக தனி நடைபாதை..!


சீனாவில்  அநேகமானோர் Smart Phone களை பார்த்தவண்ணம் வீதிகளில் சுற்றித்திரிவதனால் அதிகளவு பாதை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் பலரும் பல அசெளகரியங்களுக்கு முகம்கொடுகின்றனர்.

இதற்கான ஓர் தீர்வாகவே சீனாவின் Xi'an நகரில் இந்த வினோதமான தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை பெரும்பாலானோர் ஒரு வரவேற்கத்தக்க தீர்வாக கருதவில்லை. சிலர் இவ்வாறு  Smart Phone களை பார்த்தவண்ணம் வீதிகளில் பயணிப்பவர்களை 'குருடர்கள்' எனவும் விமர்சித்துள்ளனர்.

இந்நடைபாதை பற்றிய வித்தியாசயமான, வினோதமான மற்றும் கேளிக்கையான பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றன.

படங்கள்:Previous Post Next Post