ஐந்து கேமராக்களை கொண்ட முதல் smartphone..!


LG நிறுவனம் எப்போதும் போல ஸ்மார்ட் போன் துறையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து சந்தையில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்கிறது.

இம்முறை LG தனது வித்தியாசமான புதிய  அம்சமாக 5 கேமராக்களை கொண்ட ஸ்மார்ட் போன் இனை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆன்ட்ராய்ட் போலீஸ் அறிவித்துள்ளது .

LG இன் அடுத்த வெளியீடான V40, முன் புறம் 2 கேமராக்களையும் பின் புறம் 3 கேமராக்களையும் கொண்டிருக்குமென ஆன்ட்ராய்ட் போலீஸ் மேலும் தெரிவித்துள்ளது.


சமீப காலங்களில் LG தனது ஸ்மார்ட் போன்களில் சில நுணுக்கமான மாற்றங்களை மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் இக்கேமராக்கள் எங்கே எப்படிப் பொருத்தப்பட்டிருக்கும் மற்றும் அவற்றின் இயக்கம் எவ்வாறிருக்கும் என்பது பாவனையாளர்களிடம் இவ் ஸ்மார்ட் போன் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Previous Post Next Post