Latest Updates

25 வயதிற்குட்பட்ட பட்டதாரிகளுக்கு வட்டியில்லா கடன்..!


25 வயத்திற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் முயற்சிகளுக்காக வட்டியில்லா கடன் திட்டமொன்றை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இக்கடனுதவி என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய ஆற்றல் மிக்க இளைஞர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதே இக்கடனுதவித் திட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

இவ்வாண்டு வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு ஏற்ப தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு இக்கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன.

Source: news.lk