3 மொழிகளுக்குமான தேசிய பாடசாலைகள்..!


* மும்மொழிகளுக்கான புதிய தேசிய பாடசாலையொன்று கொழும்பு பிரதேசித்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. [அமைச்சரவை தீர்மானங்கள் - 2018.08.21]

அனைத்து இனங்களுக்கும் உட்பட்ட மாணவர்களுக்கும் மும்மொழிகளில் கல்வியை வழங்கவதற்காக புதிய தேசிய பாடசாலையொன்று கொழும்பு மாவட்டத்தில் அமைப்பதற்கு உத்தேசியக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 900 மில்லியன் ரூபா முதலீட்டுடன் இந்த மும்மொழி கலப்பு பாடசாலை வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.

இந்தப் பாடசாலைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


* நுவரெலியா நானுஓயா பிரதேசத்தில் மும்மொழிகளுக்கான புதிய கலவன் தேசிய பாடசாலையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. [அமைச்சரவை தீர்மானங்கள் - 2018.08.21]

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கல்வி வசதிகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட மும்மொழி கலப்பு தேசிய பாடசாலை ஒன்று 800 மில்லியன் ரூபா முதலீட்டுடன் நானுஓயா பிரதேசித்தில் அமைக்கப்படவுள்ளது.

தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பாடசாலையாக இது முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Previous Post Next Post