உலகின் முதல் 3D ஸ்கேனர் அறிமுகம்..!


அமெரிக்க நிறுவனமொன்று உலகின் முதல் 3D (முப்பரிமாண) ஸ்கேனர் இயந்திரத்தினை அறிமுகம் செய்துள்ளது.

கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள் வளரத் தொடங்கிய 1990களுக்கு முன்பு வரை உடற்கட்டு (பிட்னெஸ்) சார்ந்த விடயங்களை தெரிந்துகொள்வதற்கு, பதிவுசெய்து பாதுகாப்பதற்கு குறிப்பிடத்தக்க வழியேதும் இல்லை. அதன் பிறகு, கைபேசி, ஸ்மார்ட் வாட்ச் போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.

இந்நிலையில், உங்களது உடலை பதினைந்தே நொடிகளில் ஸ்கேன் செய்து, முப்பரிமாண வடிவில் வழங்குவதுடன், உங்களது எடை, உடலிலுள்ள கொழுப்பின் சதவீதம், கொழுப்பற்ற பகுதியின் எடை போன்ற பல விதமான தகவல்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வசதியை இந்த கருவி அளிக்கிறது.

மேலும், இந்த கருவியை பயன்படுத்தி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்து, உங்களது உடலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்/ பின்னேற்றத்தையும் இதன் மூலம் காண முடியும்.

இதுபோன்ற கருவியின் மூலம் பெறப்படும் உடலின் மின்னணு வடிவத்தை கொண்டு எதிர்காலத்தில் மருத்துவம், பேஷன், வீடியோ கேம் போன்ற பல்வேறு விடயங்களில் புதுமையை புகுத்த முடியுமென்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post