வேலையற்ற பட்டதாரிகள் 4,000 பேரை சேவையில் இணைக்க நடவடிக்கை..!


வேலையற்ற பட்டதாரிகள் 4,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நியமனக் கடிதங்களைத் தயாரிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்களே வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன் சந்தீர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு கட்டங்களின் கீழ் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய, முதலாவது கட்டத்தின் கீழ் எதிர்வரும் 20 ஆம் திகதி 4,130 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- newsfirst
Previous Post Next Post