ஜாலிக்காக விமானத்தை திருடி வானில் பறந்த ஊழியர்..!


அமெரிக்காவின் சியாட்டல் விமான நிலையத்தில் வேலைசெய்யும் ஊழியர் ஒருவர், பயணிகள் அற்ற ஓர் விமானத்தை நேரம் பார்த்து திருடி வானில் பறந்துள்ளார். இதை இவர் ஜாலிக்காக செய்தார் என்றே கூறப்படுகின்றது.

இந்த ஊழியர் ஓர் விமான நிறுவனத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக விமானத்தை கட்டி இழுப்பது மற்றும் பயணிகளின் பைகளை விமானத்திலிருந்து வெளியே எடுப்பது போன்ற பணிகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட இவ்விமானம் பறக்க ஆரம்பித்து சில வினாடிகளில் விமானத்தை துரத்தி இரண்டு ஜெட் விமானங்கள் பின்தொடர்ந்துள்ளன.

விமான நிலையத்தில் இருந்து 30 மைல் தொலைவிலுள்ள ஓர் தீவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியதில் அதை அனுமதியின்றி எடுத்துச் சென்ற ஊழியரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.Previous Post Next Post