புதிய தேனீ வளர்ப்பு ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம்..!


மிகவும் இலாபகரமான தொழிற்துறையாக கருதப்படும் தேனீ வளர்ப்பை மேற்படுத்துவதற்காக பாரிய வளத்தை இலங்கை கொண்டுள்ளது.

இருப்பினும் தேனீ வளர்ப்பு தொடர்பாக விஞ்ஞான அறிவு போதாமையினால், தற்பொழுது இலங்கையில் தேனீ வளர்ப்பு தொழில் துறை அழிந்து போகும்நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  இதனால் தேனீ வளர்ப்பு தொழில்த்துறை குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. அத்தோடு உள்ளுர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக தேன் இறக்குமதி செய்யப்படுகிறது.

இவ்விடயங்களை கவனத்திற்கொண்டு தேனீ வளர்ப்பு தொழிற்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரண்டு இலட்சம் தேனீ அலகுகளை முதல் கட்டத்தின் கீழ் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் 1000 விவசாயிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களுக்கு தேனீ வளர்ப்புக்கான பெட்டிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.


தேனீ வளர்ப்பு தொழிற்துறையை மேலும் விரிவுபடுத்துவதற்காக சுமார் 2 இலட்சம் பேருக்கு புதிய தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்துவதற்கும் வருமான வழிகளை எற்படுத்தும் நோக்கிலும் நவீன பயிற்சி மற்றும் ஆய்வு மத்திய நிலையம் தம்பேதென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
Previous Post Next Post