நாய்களுக்கு 'ஷூ' அணிவிக்குமாறு காவல்துறை வேண்டுகோள்..!


வெப்பநிலை அதிகரித்து உள்ளதையடுத்து நாய்களின் பாதங்களை வெயிலிருந்து காக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஷூரிச் நகர போலீசார், நாய்கள் வைத்திருப்பவர்கள் அவைகளுக்கு காலணி வாங்கி அணிவிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

ஷூரிச் போலீசார் “hot dog campaign” என்னும் திட்டத்தை தொடங்கி தங்கள் நாய்களை கடும் வெப்பத்திலிருந்து எவ்வாறு காப்பது என்று பொதுமக்களுக்கு கற்பித்து வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 30 டிகிரி வாக்கிலேயே வெப்ப நிலையைக் கொண்டுள்ள சுவிட்சர்லாந்தில் அதிக வெப்பமான கோடைக்காலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெப்பநிலை 30 டிகிரியாக இருந்தாலும் தரையில் 50 முதல் 55 டிகிரி போல உணரப்படுகிறது. இதனால் நாய்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.
நாய்கள் இந்த வெப்ப நிலையில் தரையில் நடப்பது மனிதர்கள் வெறுங்காலுடன் தரையில் நடப்பதற்கு சமம் எனப் போலீசார் கூறினர்.

அதனால் நாய்களின் பாதங்கள் வெந்து போகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்கள், தங்கள் நாய்களை “வாக்கிங்” அழைத்துச் செல்லும் போது தரை சூடாக இருக்கிறதா? என்று உறுதி செய்து விட்டு அவற்றை அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

அதேபோல் நாய்களைக் காருக்குள் அடைத்து வைக்க வேண்டாம் என்றும் அவற்றுக்கு போதுமான தண்ணீர் வழங்குமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Previous Post Next Post